கொவிட் 19 தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிக அவதானமாகவும் சமூக பொறுப்புடன் செயற்படுமாறும் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயமும் கொவிட் 19 தடுப்பு செயலணியின் பிரதானியுமான பாரத் அருள்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதிலும் கொவிட் 19 தொற்று அதிகரித்துவருவதால் பல கிராம சேவகர்கள் பிரிவு முடக்கப்பட்டு வரும் நிலையில், மலையக பகுதிகளில் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முழு முயற்சியுடன் செயற்பட்டுவருகின்றோம்.
பொது சுகாதார அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இராணுவம், முன்கள பணியாளர்கள் மற்றும் துப்பரவு தூய்மை பணியாளர்கள் என அனைவருடனும் இணைந்து நாங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.
இதனிடையே, எங்களுடைய சமூகத்தையும் மக்களையும் பாதுகாப்பும் பொறுப்பு எங்கள ஒவ்வொருவருக்கும் உண்டு.
அந்த சமூக பொறுப்பை கருத்தில் கொண்டு கொவிட் 19 தொற்று பரவாதிருப்பதற்கு முன்னெடுக்கும் அனைத்து முன் நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் ஊடாக கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு விசேட செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக,
நுவரெலியா 0777212109,
அட்டன் 0715733335,
கண்டி 0772249609,
பதுளை 0776337803,
இரத்தினபுரி 0778822417,
காலி 0777670241,
கேகாலை 0726372265 ஆகிய
இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ள முடியும்.
இவ்வாறு, தொடர்பு கொள்ளும் போது, உங்களுக்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கு நம் அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்.
இதேவேளை, வெளி மாவட்டங்களிலிருந்து வருகைத் தருபவர்கள் குறித்து உரிய தகவல்களை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், வெளிமாவட்டங்களிலிருந்து வருகைத் தருவோர் தங்களுடைய பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
மலையக பகுதிகளில் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எங்கள் அனைவருக்கும் தார்மீக பொறுப்புள்ளது. இந்த கொவிட் 19 தொற்றிலிருந்து மீள்வதற்கு பொறுப்புடன் செயற்படுதோடு, அத்தியாவசிய தேவைகளுக்கு அருகிலுள்ள பிரஜா சக்தி நிறுவனத்தை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
கொவிட் 19 தொற்றோடு பலரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதால் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை சேமித்து வைத்துகொள்வது மட்டுமல்லாமல் அரசு வழங்கியுள்ள விதிமுறைகளை பின்பற்றுக – என்றார்.