அவமானப்படுத்தப்பட்டமையே இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்க்க காரணம்- நீதி கோரி அமைதி பேரணி

இளம் குடும்பஸ்தரான அட்டன் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த சுரேஸ் திட்டமிட்டப்படி அவமானப்படுத்தப்பட்டு அதனால் அவமானம் தாங்க முடியாமலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஒஸ்போன் தோட்ட பொதுமக்கள் சார்பாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

11ஆம் திகதி அட்டன் பஸ் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஒஸ்போன் வீதியில் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இரு பயணிகளுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், சுரேஸ் என்ற இளம் குடும்பஸ்தர் பஸ்ஸில் உள்ள பயணிகள் சாரதி மற்றும் நடத்துனரால சரமரியாக தாக்கப்பட்டு பின்னர் ஆடை களைந்த நிலையில் நின்ற நிலையினால் ஏற்பட்ட அவமானத்தினாலேயே அவர் ஆற்றி குதிக்க வேண்டி மனநிலை ஏற்பட்டதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

11ஆம் திகதி ஆற்றில் பாய்ந்த இளைஞன் 12ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அன்னாரது இறுதி கிரியைகள் இன்று ஒஸ்போன் தோட்ட பொது மயானத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், இறுதி ஊர்வலத்தின் போது தோட்ட மக்கள் உட்பட ஏனை பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த இளைஞனின் மறைவுக்கு காரணமானவர்கள் குறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அமைதியான பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

பெரும் எண்ணிக்கையிலானோர் பல்வேறு சுலோகங்களை எழுதிய பதாகைகளுடன் அமைதியான ஊர்வலமொனறை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தோட்ட மக்கள்,
சுரேஸ் என்ற இந்த இளைஞன் ஒரு பஸ் நடத்துனர். அட்டன் – ஒஸ்போன் வீதியில் உள்ள பிரதேசங்களில் அவரை தெரியாதவர் எவரும் இருக்க முடியாது. எல்லோருடனும் மரியாதையாக விசுவாசமாக பழகும் ஒருவர்.

சம்பவதினத்தில் குறித்த பஸ்ஸில் ஏற்பட்ட பிரச்சினையினால் அவர் அவமானப்படுத்தப்பட் டமையினாலேயே இவ்வாறானதொரு முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டதற்கு பிரதான காரணம் ஆகவே திட்டமிடப்பட்ட ஒரு சதியாகவே இதனை நாம் பார்க்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறானதொரு நிலைமை இனி எவருக்கும் வரக்கூடாது.

இரு தரப்புக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டால் குறித்த பஸ் சாரதி சம்பந்தப்பட்டவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல்; இவர்கள் சேர்ந்து குறித்த நபரை தாக்குவதற்கான உரிமை யார் கொடுத்தது? ஒரு சாரதியும் நடத்துனரும் சேர்ந்து தாக்குவதற்கு என்ன உரிமை இருக்கு? பஸ் உரிமையாளரே இதற்கு காரணம்… அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம்.

உடன்பிறவா சகோதரன் இவ்வாறு கூறுகிறார்..
அவரை அடிக்கும் போது நான் பார்த்தேன். என்ன நடந்தது ஏன் அடிக்கன்றீர்கள் என கேட்டேன் அவர்கள் என்னையும் அடித்தார்கள். அதன் பின்னர் அருகில் உள்ள பொலிஸாரிடம் சொன்னேன். அவர்கள் அடிக்கிறார்கள் கைது செய்யுங்கள் என்றேன்… அவர்கள் கேட்கல. அவரை அடித்தது பிழை பஸ் சாரதி நடத்துனர் ; ஆகியோரும் இணைந்தே அவரை அடித்தார்கள். பொலிஸாருக்கும் இது தெரியும் … உடுப்புகூட கழட்டி கிழிச்சி தான் வைத்திருந்தார்கள்.

சுரேஸுக்கு நடந்த மாதிரியே நாளை எங்க பிள்ளைகளுக்கும் நடக்காது என்பது என்னிநச்சியம். செருப்பில் அடிக்கலாமா? செருப்பில் அடித்து அவமானபடுத்தியமையே அவரது இறப்புக்கு காரணம். ட்ரைவர், கன்டக்டருக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டு அப்போதே அவரது ஆத்மா சாந்தியடையும் என்று பிரதேச வாசியொருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்குறித்த சம்பவம், அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றிருந்தாலும் குறித்த இளைஞன் வசிக்கும் இடம் நோட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டமையினால், அங்கும் முறைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 13.11.2023 அன்று இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்வதற்காக நோட்டன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது அவரது முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் பெற்றோர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles