‘ஆசிரியர்களுக்கு மாத இறுதியில் கொரோனா தடுப்பூசியேற்ற ஏற்பாடு’

இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரே தடவையில் நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பது சாத்தியப்படாது என்பதனால் கட்டம் கட்டமாக அவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்கவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அதற்கிணங்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.அவர்கள் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்கள்.

அதனைக் கருத்திற்கொண்டே கல்வியமைச்சு அவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகரு டன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ஒரே தடவையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது சாத்தியமற்றது எனினும் பெப்ரவரி இறுதிப்பகுதி அல்லது மார்ச் முதல் பகுதியில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதை அவர் உறுதியாக தெரிவித்தார் என்றும் அமைச்சர் ஜி எல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles