ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 45 பவுண் நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பவுண் நகைகள், பணம் திருடப்பட்டுள்ளன.

ஆசிரியர்களாகப் பணியாற்றும் கணவன், மனைவி இருவரும் பாடசாலைகளுக்குச் சென்ற நேரத்திலேயே, இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பகல் வேளையில் வீட்டின் கூரை வழியாக உட்புகுந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 45 பவுண்களுக்கு மேலான நகைகளையும், இரண்டு 2 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles