ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும், மக்களுக்கு நரகத்தையும் காட்டியுள்ள பட்ஜட் – சஜித் விளாசல் !

” ஐ.எம்.எப் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், இரண்டாவது ஐ. எம். எப்.கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்,ஏனோ தானோ என்ற அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும்,ஆட்சியாளர்கள் சொர்க்கபுரியில் உள்ளனர் என்றும், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம் பற்றி பேசும் முன்,2022 வரவு செலவுத் திட்ட முன்பொழிவில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும்,இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்ட முன்மொழிவில் பாரியளவிலான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வாழ்க்கைச் செலவை 7000 இலிருந்து 17000 ஆக அதிகரிப்பதற்கான முன்மொழிவு வரவு செலவுத் திட்ட பிரேரணையில் இருந்த போதிலும்,அது 7500 முதல் 10000 வரை இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வரவு செலவுத் திட்ட உரையின் சில அம்சங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்,இதன் மூலம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது எனவும், இது நாட்டு மக்களை ஏமாற்றும் ஊடக நிகழ்ச்சி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles