” ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் என சொல்லுங்கள். அவ்வளவு சக்திவாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்.”
இவ்வாறு ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவுக்கு, அமைச்சர் சமந்த வித்யாரத்ன பதிலடி கொடுத்துள்ளார்.
தனது தந்தையை கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்த ஆட்சியைக் கவிழப்போம் என சதுர சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார். இது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலிளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,
” சட்டம் எவ்வாறு செயற்படும் என்பது எமக்கு தெரியாது. அதில் நாம் தலையிடுவதும் கிடையாது. எனினும், கைது பயத்திலேயே ராஜித பதுங்கி இருக்கக்கூடும். சிறைச்சாலையில் இருப்பதைவிடவும் ஒளிந்திருப்பது கஷ்டமாகவே இருக்கும். அந்த கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டு வரட்டும். சட்டம் தனது கடமையை செய்யும்.” – என்றார்.