கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில், ஆட்டோவொன்றுக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் பெண் சிசுவொன்று உயிரிடன் மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து 10 நாட்களேயான குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.
குறித்த சிசுவை இன்று காலை தலவாக்கலை பொலிஸாரால் மீட்கப்பட்டடது.
பின்னர் அந்த சிசுவுக்கு தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலுள்ள பெண் கான்ஸ்டபிள் ஒருவரால் தாய்ப்பால் ஊட்டப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிசிரிவி கமெராவின் காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு, குழந்தையை கைவிட்டு சென்றவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணை வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
கௌசல்யா
