ஆயிரம் ரூபாவை உறுதி செய்துள்ள அரசாங்கத்திற்கு இ.தொ.கா. இளைஞர் அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இ.தொ.கா. இளைஞர் அணியின் பொதுச் செயலாளர் அர்ஜூன் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த வெற்றிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளைஞர் அணிப் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :க
மறைந்த தலைவர் கெளரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கனவை நனவாக்க அயராது பாடுபட்டு கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ,தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக 1000 ரூபாய் என்ற முன்மொழிவை அரச வர்த்தமானியின் ஊடாக உறுதி செய்தமைக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச , கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச , மற்றும் தொழில் அமைச்சர் கௌரவ நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை இ தொ கா இளைஞர் அணி சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம் .
இந்த வெற்றிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு செய்த அணைத்து தரப்புகளுக்கும் நன்றிகள் .
ஜெ அர்ஜுன்
பொது செயலாளர்
இ தொ கா இளைஞர் அணி