பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தியது.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் இந்த வலியுறுத்தலை விடுத்தனர்.
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன், உறுப்பினர் உதயா ஆகியோர்,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது. எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை என்ற பல்லவி வேண்டாம். நடக்கவில்லை என்பதால்தான் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.” – என்றனர்.