ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்து பொருத்தமற்ற செயற்பாடாகும்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.

தற்போதைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

இது பொருத்தமற்ற செயற்பாடாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles