” ஆறா வடுக்களை தந்த ஆழிப்பேரலை”

சுனாமி பேரலை அனர்த்தம் மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த இலங்கையர்களின் ஞாபகார்த்தமாக நாளை (26) காலை 9.25 முதல் 9.27
வரை வரை இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொது மக்களைக் கேட்டுள்ளது.

சுனாமி பேரலை காரணமாக இந்நாட்டின் 14 மாவட்டங்களில் அனர்த்தம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 35,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 5000 பேர் காணாமல் போயுள்ளனர். 34 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 235,145 குடும்பங்களைச் சேர்ந்த 502.456 பேர் சுனாமிப் பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாளை நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. பிரதான வைபவம் காலி, பெராலிய சுனாமி ஞாபகார்த்த ஸ்தூபிக்கு அருகில் இடம் பெறும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

Related Articles

Latest Articles