இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை இந்த அமைச்சின் ஊடாக நிறைவேற்றுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மீது நம்பிக்கை வைத்து மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்கேற்பவும் அதே நேரம் எம் மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி பிரதமருக்கு மறைந்த எமது தலைவரின் அமைச்சியினையே வழங்கியுள்ளார்.
எனவே மறைந்த தலைவர் மலையகப்பகுதியில் என்னென்ன அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்தாரோ அந்த வேலைத்திட்டங்களையும் அவர் எதிர்ப்பார்த்திருந்த திட்டங்களையும் இந்த அமைச்சினூடாக நிறைவேற்றுவோம் என்றார்.