ஆலய உண்டியல் திருடச் சென்றவரை தீண்டியது பாம்பு…..!

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களில் ஒருவரை, பாம்பு தீண்டியதையடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைக்கும் நோக்குடன், மூன்று பேர் கதவை உடைத்து திருடுவதற்கு முயன்றுள்ளனர்.

திருட முற்பட்டவர்கள் கூரிய ஆயுதங்களுடன் ஆலயத்துக்குள் நுழைந்து சி.சி.ரி.வி கமராவின் இணைப்பை துண்டித்துவிட்டு கொள்ளையிட முற்பட்டனர்.இதன்போது ஒருவரை பாம்புத் தீண்டியுள்ளது.

சம்பவத்தையடுத்து பாம்புக் கடிக்கு இலக்கானவரையும் தூக்கிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் ஆலயத்தின் சி.சி.ரி.வி கமராவில் பாதிவாகியுள்ளது. இதுதொடர்பில் ஆலய நிர்வாகத்தினால் (24 ) அன்று முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles