ஆளுநர் பதவிகளில் மாற்றம் இல்லை!

ஆளுநர் பதவிகளில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நஸீர் அகமத் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தன.

இதுகுறித்து ஜனாதிபதி செலயக அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டுகேட்டபோது, இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நஸீர் அகமத்திற்கு ஆளுநர் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்தக் கோரிக்கை குறித்து சாதகமான பதில் எதுவும் வழங்கப்படவில்லையென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles