இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 54 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்தே, இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாவர்கள், ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர், பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.
இவர்களை திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை தமது நாடு ஏற்காது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. எல்லை பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது. ஆஸி.க்குள் நுழைய முற்பட்ட பலர் நாடு கடத்தப்பட்டும் உள்ளனர்.
எனினும், ஆட்கடத்தல் காரர்கள், பணத்துக்கு ஆசைப்பட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றனர். எனவே, விழிப்பாக இருக்குமாறு பாதுகாப்பு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.










