இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட்போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாகின்றது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மழையால் பாதிக்கப்பட்ட 2ஆவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்த டெஸ்டும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாள் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.