ஹட்டனில் கடும் பனிப்பொழிவு, ஐரோப்பாபோல் காட்சியளிக்கும் ஹட்டன் என்றெல்லாம் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் இன்று காலைமுதல் வைரலாகின.
ஹட்டன் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இடம் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர்களிடம் வினவினோம்.
இது சாத்தியமில்லை, ஹட்டன் பகுதியும் இல்லை எனக் கூறினர். சில அதிகாரிகளை தொடர்புகொண்டும் வினவினர். அவர்களும் ஹட்டனில் இவ்வாறு பனிபொழிய சாத்தியமே இல்லை எனக் கூறியுள்ளனர்.
இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் இவ்வாறு பனிப்பொழிவு இடம்பெறுவது வழமை. அங்கு தேயிலை மலைகளும் உள்ளன. சிறந்த குளிர்கால சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றது. அப்பகுதியில் உள்ள படங்களே இவ்வாறு பகிரப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் இது ஹட்டன் பகுதி அல்ல என்பது உறுதி….!