இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா ஆஸி? நாளை 2ஆவது T-20 போட்டி!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.

இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் போட்டிளில் 9-ல் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

காயம் அடைந்த ஆல் ரவுண்டர் ஜடேஜா எஞ்சிய 2 ஆட்டத்திலும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூர் 20 ஓவர் அணிக்கு தெரிவாகியுள்ளார்.

நாளைய ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது.

Related Articles

Latest Articles