” இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் இரகசியமாக வைத்திருப்பதாக எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவற்றை விரைவில் மக்கள் மயப்படுத்துமாறும் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
” இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இவ்வொப்தங்கள் தொடர்பில் புரிந்துணர்வு அடிப்படையில் இரு நாடுகளும் செயற்பட வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடத்திய பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதில் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கென நடைமுறை உள்ளது. அதனை பின்பற்ற வேண்டும். விரைவில் சபையில் முன்வைக்கப்படும். நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.” – என்றார்.