இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல்கள் காலி , கொழும்புக்கு விஜயம்

இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்துக்கப்பலான சமர்த் மற்றும் அதிவேக ரோந்துக் கப்பலான அபிநவ் ஆகியவை 2024பெப்ரவரி 27 ஆம் திகதி காலிக்கு வருகைதந்துள்ளன. 2024 மார்ச் 01 வரை அங்கு தங்கி நிற்கும் இக்கப்பல்கள் 2024 மார்ச் 02-05 வரையில் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை விஜயத்தை நிறைவுசெய்து புறப்படவுள்ளன.

குறித்த இந்திய கடலோரக் காவல்படை கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான பிரதி தலைமை இயக்குனர் பி பிரதீப் குமார் மற்றும் தளபதி பிரபாத் குமார் ஆகியோர் இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளை இவ்விஜயத்தின்போது சந்திக்கவுள்ளனர்.

இக்கப்பல்கள் இலங்கையில் தரித்து நிற்கும் காலத்தில், இலங்கை கடலோரக் காவல்படைக்கு ஏடீளுளு, தீ அணைத்தல் மற்றும் சேதக் கட்டுப்பாடு, கடல்சார் மாசடைதலுக்கு பதிலளிப்பது குறித்தபயிற்சிகள் வழங்கப்படுவதுடன் நிபுணத்துவ ரீதியான உரையாடல்களும் இடம்பெறும். மேலும், யோகா, கடற்கரையை சுத்தமாக்கல் மற்றும் நடை பயணம் போன்ற நிகழ்வுகளும் இந்த விஜயத்தின்போது நடைபெறவுள்ளன. அத்துடன் இக்கப்பல்கள் புறப்படும்போது, காலி மற்றும் கொழும்புக்கு அப்பால் பசெக்ஸ் பயிற்சிகள் (PASSEX) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாட்டு மக்களிடையிலான தொடர்புகளை வலுவாக்கவும் இந்திய கடலோரக் காவல் படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கப்பல்களைப் பார்வையிடுவதற்கு பாடசாலைமாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அத்துடன் இலங்கையின் பாதுகாப்புத் துறை சார்ந்த சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சேவை உத்தியோகத்தர்களுக்காக இக்கப்பல்களில் விருந்துபசார நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளது.

குறித்த இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல்களின் விஜயம் மூலமாக பிராந்தியத்தில் காணப்படும் கடல்சார் சவால்களை வினைத்திறன் மிக்க வகையில் எதிர்கொள்ளும் வல்லமையினை இலங்கை கடலோரக் காவல் படையினரும் ஏனைய அதிகாரிகளும் பெற்றுக்கொள்வார்கள்.

இந்தியக் கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகளான கொரா, கப்ரா மற்றும் கரஞ் ஆகியவை கடந்த சில மாதங்களில் கொழும்புக்கு வருகைதந்திருந்தன.

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைமற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் வளர்ச்சியும் பாதுகாப்பும்என்ற சாகர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இரு நட்பு நாடுகளினதும் கடற்படையினர் இடையிலான இயங்குதிறன் மற்றும் தோழமையை மேம்படுத்தும் இலக்குடனேயே இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவற்றின் கப்பல்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles