இந்த அரசின் ஆயுள் 3 மாதங்களுக்கு மாத்திரமே: நாம் அடாவடி செய்து வாக்கு பெறமாட்டோம் – திகா

“ தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே உள்ளது. நான் வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றாமல் எனக்குக் கிடைத்த அமைச்சை வைத்து நிறைவான சேவைகளை செய்து காட்டியுள்ளேன். எனவே, அடாவடித்தனம் செய்தும், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தும் மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. சஜித் தலைமையிலான நல்லாட்சியில் மலையகத்தில் மீண்டும் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்வேன்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

சாமிமலை மாநிலு தோட்டத்தில் இடம்பெற்ற கூரைத் தகரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதித் தலைவர் எம். உதயகுமார் எம்.பி., பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். அவர் மேலும் பேசுகையில்,

2013 ஆம் ஆண்டு என்னால் பெற்றுக் கொடுக்கப்பட்ட சுமார் 10 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த கூரைத் தகடுகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்காமல் முடங்கிக் கிடந்ததை காலநிலை சீரற்றுள்ள காலத்தில் மக்களுக்கு கையளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். நான் சில அரசியல்வாதிகளைப் போல வாயால் வடை சுட்டதுமில்லை, இனிமேல் சுடப் போவதுமில்லை. தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடியதும் கிடையாது, கவர்ச்சிக்காக சண்டித்தனம் காட்டி. அரசாங்க வளங்களைப் பயனபடுத்திக் கொண்டு அடாவடித்தனம் செய்து கூத்தடித்ததும் கிடையாது.

நல்லாட்சி அரசாங்கத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து காணி உறுதிப் பத்திரங்களை வழங்கியபோது, அந்த வீடுகளை “குருவிக் கூடுகள்” என்று விமர்சித்து ஏளனம் செய்தார்கள். இன்றைய அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 20 பேர்ச் காணியில் “சிலப்” போட்டு வீடுகளைக் கட்டிக் கொடுக்கப் போவதாகவும், பல்கலைக் கழகம் அமைக்கப் போவதாகவும் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவுமே மக்களுக்குக் கிடைக்கவில்லை. இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்துக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. கூட்டிக் கொடுக்கப் போவதாகக் கூறி ஏமாற்றுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்னும் மூன்று மாத காலத்தில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிந்து விடும்போது மலையக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுபவர்களின் ஆட்டமும் அடங்கி விடும், முகத் திரையும் விலகி விடும். நான் கூறுகின்ற தொப்பி யாருக்கு பொருத்தமாக இருக்கின்றதோ அவர்கள் அணிந்து கொள்ளலாம்.

அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வரும்போது, அபிவிருத்தித் திட்டங்களுடன் தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக நிச்சயம் மாறுவார்கள். நான் அமைச்சராக வரும்போது. என்னுடைய கட்சிக்கு வந்தால் தான் வீடுகள் கிடைக்கும் என்ற நிலைமை இருக்காது. நான் இதுவரை செய்துள்ள சேவைகளை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles