தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமெனில் அது கூட்டுத் தீர்வாகவே அமைய வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தென்னாபிரிக்காவில் நிறுவப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்ல, பிரச்சினைகளை உருவாக்கியவர்களும் உள்ளே இருந்துதான் தீர்வை உருவாக்கினர். அவ்வாறு இல்லாவிடின் பிரச்சினை நீளும். என்னை பொறுத்தவரையில், நிலையானதொரு தீர்வைக்காண வேண்டுமெனில் அது கூட்டு தீர்வாகவே அமைய வேண்டும்.
வடக்கு, கிழக்கு பிரச்சினையை வைத்து வாக்கு வேட்டை நடத்த முற்படக்கூடாது, என்னை பொறுத்தவரையில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.