” இனவாதத்தை ஒழிக்க இணைந்து செயற்படுவோம். அரசியலில் இருந்து இனவாதத்தை முற்றாக ஓரங்கட்டுவோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், இனவாதத்தை ஒடுக்கும் முயற்சியானது தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிப்பதாக அமையக்கூடாது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
