நாட்டின் சில பகுதிகளுக்கு நீர்பாசான திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, பெல்மதுல்லை, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட, அயகம, இங்கிரிய, ஹொரண, தொடாங்கொடை மற்றும் மில்லனிய ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நில்வலா கங்கை பெருக்கெடுத்ததை அடுத்து, பஸ்கொடை, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸை, அத்துரெலிய, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, தியாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில், தெஹியோவிட்ட, ருவன்வெல, சீத்தாவாக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.