தேசிய இன விவகார ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அமைச்சர் பான் யூ தலைமையிலான சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள மேற்படி தூதுக்குழு 23 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருந்து, முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளது.
இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலேயே இலங்கை தரப்புகளுடன், மேற்படி குழு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன ஜனாதிபதியின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான் யூ, சீனாவில் சிறுபான்மையினத்தவர்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாண்டுவருகின்றார்.
இவரின் முக்கியத்துவம்கருதி கடந்த வருடம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு உள்வாங்கப்பட்டார்.
இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தேசிய மக்கள் சக்தியின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
