கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை இதனைக் குறிப்பிட்டார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஆராயும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தர பரீட்சையில் 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.
