இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது. இதில் இயக்​குநர் ஆர்.கே.செல்வமணி போட்​டி​யின்றி தலை​வ​ராகத் தேர்வு செய்​யப்​பட்​டார்.

அவர் ஏற்​கெனவே இச்​சங்​கத்​தில் தலை​வ​ராக இருந்​தவர். நடப்பு தலை​வ​ராக இருந்த ஆர்​.​வி.உதயகு​மார் பொதுச் செய​லா​ள​ராக​வும் செய​லா​ள​ராக இருந்த பேரரசு பொருளாள​ராக​வும் துணைத் தலை​வர்​களாக பி.​வாசு, கே.எஸ்​.ரவி​கு​மார் ஆகியோ​ரும் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டனர்.

5 பேர் கொண்ட இணைச் செய​லா​ளர்​கள்​,மற்​றும் செயற்​குழு உறுப்​பினர்​களுக்கு மட்​டும் தேர்​தல் நடை​பெற்​றது. இதில், இயக்​குநர்​கள் எழில், சரண், சுந்​தர்​.சி, ஏகம்​ப​வாணன், ஏ.கே.நம்​பி​ராஜன் என்ற நம்பி ஆகியோர் இணைச் செய​லா​ளர்​களாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். மேலும் 17 பேர் செயற்​குழு உறுப்​பினர்​களாகத் தேர்ந்தெடுக்​கப்​பட்​டனர்.

Related Articles

Latest Articles