இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா! பீஸ்ட் பணிகள் பாதிக்குமா?

கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொட்டு இருக்கும் இந்த நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும்கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வடிவேலு தொடங்கி விஷ்ணு விஷால் வரை எண்ணற்ற சினிமா நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் செல்வராகவன் தனக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இன்று அவர் கொரோனா பாசிட்டிவாகி இருப்பதாகவும் தன்னை கடந்த இரண்டு மூன்று நாட்களில் யாராவது சந்தித்து இருந்தால் உடனே மருத்துவ அறிவுரை எடுத்துக் கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறார்.

மேலும் எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்கவும், தவறாமல் மாஸ்க் அணியவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர். தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவர் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதன் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. செல்வராகவனுக்கு கொரோனா என்பதால் பீஸ்ட் பணிகளில் பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Articles

Latest Articles