” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் ஆயிரத்து 1700 ரூபா கோரி இதொகா முன்வைத்துள்ள கோரிக்கை தொழிலாளர்களை காட்டிக்கொடுக்கும் செயலாகும்.”
இவ்வாறு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
சம்பள நிர்ணய சபை கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 2 ஆயிரம் ரூபா அவசியம் என்பதே எமது கோரிக்கை. தொழிலாளர்களின் கோரிக்கையும் இதுதான்.
எனவே, இதொகாவின் 1,700 ரூபா என்ற சம்பள உயர்வு கோரிக்கை காட்டிக்கொடுப்பாகும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் மென்மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் யோசனையாகும்.” – எனவும் அவர் கூறினார்.










