உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 2ஆவது அறிக்கையை (இமாம் குழு அறிக்கை) பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (28) வெளியிடவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின், இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை தான் வெளியிடவுள்ளதாக கம்மன்பில அறிவித்திருந்தார்.
மேற்படி அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கி இருந்தார். இக்காலப்பகுதியில் அரசாங்கம் அவற்றை வெளியிடவில்லை. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை அல்விஸ் குழுவின் அறிக்கையை கம்மன்பில வெளியிட்டிருந்தார். இவ்வறிக்கையை அரசு ஏற்கவில்லை எனவும், அரசியல் பழிவாங்கலை இலக்கு வைத்தே அது நியமிக்கப்பட்டது எனவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இரண்டாவது அறிக்கையை கம்மன்பில, இன்று திங்கட்கிழமை வெளியிடவுள்ளார்.










