இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசிய கிண்ண வளர்ந்து வரும் அணிகளின் செம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் “ஏ” அணி கைப்பற்றியது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (23) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் “ஏ” அணியிடம் இந்திய “ஏ” அணி 128 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் “ஏ” அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுது.
பாகிஸ்தான் அணி சார்பில் தைப் தாஹிர் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய “ஏ” அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
