இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் ?

நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழக்கமான பராமரிப்புக்காக ஜூன் 18 முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளது .

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் முடிவடைய குறைந்தது 75 நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனல்மின் நிலையம் தேசிய மின்கட்டமைப்பிற்கு தினசரி 270 மெகாவோட்களை வழங்குகிறது, நாடு கடுமையான எரிபொருள் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், மின் உற்பத்தி நிலையத்தை மூடுவது நாட்டின் மின் நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை மூடும் பட்சத்தில் இலங்கை மின்சார சபை டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தே மின்சாரத்தை பெற்றுக்கொள்ள நேரிடும். இது மேலும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது.

Related Articles

Latest Articles