இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று வரை (3) 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்த்தில் கொரோனா தொற்று குறித்து நேற்றைய தினம்(3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவu; தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை பிரதேச செயலகப் பிரிவில் 18 பேரும், இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் 12 பேரும், குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் 7 பேரும், அயகம பிரதேச செயலகப் பிரிவில் 7 பேரும், கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவில் 6 பேரும், எம்பிலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் 3 பேரும், காவத்தை பிரதேச செயலகப் பிரிவில் 2 பேரும், எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் 2 பேரும், கொடக்கவெல பிரதேசத்தில் ஒருவரும் உட்பட மொத்தம் 58 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இது வரை 1425 குடும்பங்களை சேர்ந்த 3620 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம மேலும் தெரிவித்தார்.