இராகலை – ஹைய்பொரஸ்ட் இ.போ.ச பஸ் சேவை நிறுத்தம்! பயணிகள் அசௌகரியம்!!

நுவரெலியா போக்குவரத்து சபையின் கீழ் இயங்கி வந்த இராகலையில் இருந்து ஹைய்பொரஸ்ட் வழியாக கோணபிட்டிய குட்வுட் வரையிலான பஸ் சேவை அண்மைக் காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பஸ்ஸில் வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த வலயத்திற்குட்பட்ட பல பாடசாலை மாணவர்கள் செல்வதால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இச் சேவை காலை 7.00 மணிக்கு இராகலையிலிருந்து புறப்பட்டு ஹை பொரஸ்ட் வழியாக 8.00 மணிக்கு கோணபிட்டிய குட்வுட் வரை சேவையில் ஈடுபட்டு வந்தது.

எனினும் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டமையால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தர முடியாததன் காரணமாக கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

ஆசிரியர்கள் சிலர் நாள் ஒன்றுக்கு 1000/- தொடக்கம் 1500/- வரை செலவு செய்வதோடு சிலர் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்கின்றனர்.

4 மாதங்களாக இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் அதிகாரிகளும் பஸ் பழுதடைந்துள்ளது, ஓட்டுனர் இல்லை என பல சாக்குபோக்குகளை கூறுகின்றனர்.

இச் சேவையை பயன்படுத்துவது பெரும்பாலும் தமிழ் மொழி பாடசாலை என்பதால் போக்குவரத்து சபை அதிகாரிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதுமில்லை.

Related Articles

Latest Articles