பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, அரசால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் நிவாரணத் திட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனின் பங்குபற்றலுடன் இதற்கான வேலைத்திட்டம் இவ்வாரம் முதல் ஆரம்பமாகியுள்ளது.
இதன் ஓர் அங்கமாகஹட்டன் நகரசபை பகுதிக்கு உட்பட்ட அலுத்கல பகுதியில், இ .தொ .கா இளைஞர் அணி அமைப்பாளர் சத்யாவின் வேண்டுகோளுக்கிணங்க, ஹட்டன் நகர சபை தலைவர் பாலச்சந்திரன் மற்றும் உறுப்பினர் ரத்ன குமார் ஆகியோர் ஊடாக நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இ.தொ.காவின் இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ,அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் தயாளன், நகர சபை உறுப்பினர் ரத்னகுமார் மற்றும் இ .தொ .கா இளைஞரணி பிரதேச அமைப்பாளர் சத்யா ஆகியோரும் நிகழ்வில் கலந்துக்கொண்டனர் .