இருவேறு மோதல்களில் 7 பேர் காயம்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவில் இருவேறு மோதல் சம்பவங்களில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி நட்பு ரீதியாக மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் நொச்சிக்குளம் – சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் இன்று அதிகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 – 25 வயதுக்கு இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு படு காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மஹதிவுல்வெவ பிரதேசத்துக்குப் பொறுப்பான உத்தியோ கத்தர் தனது குடும்பத்தாருடன் ஓட்டோ வில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்போது காயமடைந்த தாயும் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles