இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 6 இலட்சம் போதை மாத்திரைகள் தமிழகத்தில் சிக்கின!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 6 இலட்சம் போதை மாத்திரைகள் தமிழகத்தில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேதாளைப் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முற்பட்ட சமயம் தமிழகப் பொலிஸாரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்த வேளை சந்தேகநபர்கள் தப்பியோடிவிட்டனர். இருந்தபோதும் 6 இலட்சம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேநேரம் தடயப் பொருட்களைக் கைப்கற்றிய பொலிஸார் சந்தேகநபர்களைத் தேடி வருகின்றனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி இந்திய நாணயத்தில் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா எனப் தமிழகப் பொலிஸார் தெரிவிப்பதால் இலங்கை நாணயத்தில் 5 கோடி ரூபா எனக் கணக்கிடப்படுகின்றது.

Related Articles

Latest Articles