இலங்கைக்கு 2ஆம் கட்ட கடன் கிடைக்குமா? மீளாய்வு கூட்டத்தின் இறுதி அமர்வு நாளை!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் இறுதி அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை   (26) நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பையடுத்தே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆவது கட்ட கடனை வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும். பேச்சு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எனவும், எனவே, 2ஆம் கட்ட கடனுதவி நிச்சயம் கிடைக்கும் என நிதி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தலைமை நிர்வாக அதிகாரி பீடர் புருவர் தலைமையிலான குழு அண்மையில் இலங்கைக்கு வந்தது.  முதற்கட்ட முன்னேற்ற கலந்துரையாடல் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது. அதன்பின்னரும் பல்துறை சந்திப்புகள் இடம்பெற்றன.

இந்நிலையிலேயே நாளை  கலந்துரையாடலின் இறுதி அமர்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகின்றது.

Related Articles

Latest Articles