பாலஸ்தீன மக்களுக்காக 100 கிலோ தேயிலையை இலங்கை அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள அமைப்புகள் ஊடாகவே
இது கையளிக்கப்படவுள்ளது.
இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் விரைவில் கொண்டு செல்லப்படவுள்ளது.
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களுக்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.