இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 3,395 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 10 இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 946 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles