இலங்கையில் அதிகளவு உயிர் அச்சுறுத்தல் உள்ள நபரென்றால் அது மஹிந்த ராஜபக்சதான் என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி என்றபோதிலும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை. எனினும், இலங்கையில் அதிகளவு உயிர் அச்சுறுத்தல் உள்ள நபர் என்றால் அவர் மஹிந்த ராஜபக்சதான். பயங்கரவாத அமைப்புடன் மோதுவது அவ்வளவு சாதாரண விடயமல்ல.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை. எனினும், மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிட வேண்டும் என கட்சியின் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவது பற்றியும் அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.