இலங்கையில் 154 வருட பழைமையான Finlays தோட்டத்தில் உச்ச வரம்புகளை தகர்த்து முன்னோக்கி வந்த இரு பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புக்களை மேம்படுத்துவதில் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, நிர்வாகத்தின் இடத்தில் உள்ளது.

பெண்கள் இத்தகைய முக்கியமான பங்கினை வகிக்கும் பல துறைகளில், விவசாயம் மற்றும் தோட்டத் துறை ஆகியன அடங்கும், இருப்பினும், பொதுவாக, இங்கு கூட அவை பெரும்பாலும் கள நடவடிக்கைகளில் மட்டுமே உள்ளன, நிர்வாகப் பொறுப்பு அல்ல.

இருப்பினும், பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தொழிலில் கூட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக Finlays Tea Estates Sri Lanka (Pvt) Ltd போன்ற உள்நாட்டு பிராந்திய தோட்ட நிறுவனங்களின் (RPCs) முயற்சிகளுக்கு நன்றி.

தோட்டங்களில் சவால் நிறைந்த தொழில்களுக்கு பெண்களை தேர்வு செய்த நிறுவனம், 2025ஆம் ஆண்டளவில் நிர்வாக நிலைகளில் 30%ஐ அடைவதற்கான இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

அதற்காக, Finlays இந்த முக்கியமான பொறுப்புக்களில் பெண்களை தீவிரமாக இணைத்துக் கொள்ளத் தொடங்கியது, ஏற்கனவே, இந்த முயற்சிகள் மகத்தான முடிவுகளைத் தந்துள்ளன, அந்த நிறுவனத்தின் இரண்டு இளம் பெண் உதவி கண்காணிகளான பிரியந்தி மகேஸ்வரநாதன் மற்றும் நவோதா விஜயாங்கனி ஆகியோர் சொல்வதைக் கேட்போம்.

பெண்கள் அதிக திறன் கொண்டவர்கள்

இளம் வயதிலிருந்தே யாழ்ப்பாணத்தின் ஒப்பீட்டளவில் பழமைவாத சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த பிரியந்தி எப்போதுமே சவால்களையே எதிர்கொண்டார், ஒருபோதும் ஒரு பணியிலிருந்து பின்வாங்கவில்லை, குறிப்பாக கட்டளை கொடுக்கும் நடவடிக்கைகளை ‘பாரம்பரிய’மாக ஆண்களே செய்து கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் இருந்து, பிரியந்தி அவருடைய சகோதரனும் அவளுடைய அக்கம் பக்கத்து சிறுவர்களும் இணைந்து ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் ஈடுபடுள்ளார்.

காலப்போக்கில் இது தற்காப்புக் கலை பயிற்சிக்கு வழிவகுத்துள்ளது, மேலும் இந்தக் கலையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

அதற்குப் பிறகு குத்துச் சண்டைப் பயிற்சியிலும் ஈடுபட்டு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியின் போது 2017ஆம் ஆண்டு மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது சவால் நிறைந்த நடவடிக்கைகள் குறித்து கூறிய பிரியந்தி மகேஸ்வரநாதன், “நான் பல்கலைக்கழகத்தில் இருந்த போது, சமீப ஆண்டுகளில் நாம் கண்ட மிக தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொடுக்கும் ஒரு வர்த்தகமாக விவசாயத்தின் ஆற்றலில் நான் ஈர்க்கப்பட்டேன், ஆனால் நடைமுறையில் இது நிச்சயமாக கலாச்சாரம், செயன்முறைகள் மற்றும் தொழில் முறைகளை சரிசெய்து தேயிலைத் தோட்டத்தில் நிர்வாக மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு சிறிய காலம் தேவைப்பட்டது.

ஆனால் இந்த வகையான தோட்டத் தொழிலில் பெண்கள் ஈடுபடாததனால் அது மிகவும் கடினமானதாகவும், சவாலானதாகவும் இருந்தது, நான் இதில் ஏதாவது சாதிக்க வேண்டுமென விரும்பினேன் – எனக்கும் மற்ற பெண்களுக்கும் எந்த தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றிபெற நாங்கள் முழுத் திறமையுள்ளவர்கள், ஒரு ஆணைப் போலவே எங்களாலும் முடியும்.” என தெரிவித்தார்.

Finlays Estate கண்காணி Richard Ohlmusஇன் வழிகாட்டுதலின் கீழ் Newburgh

Estateஇல் 6 மாதம் முழுமையான பயிற்சியைப் பெற்ற பின்னர், பிரியந்தி Waldemar Estateஇல் உதவி கண்காணியாக முதல் நியமனம் வழங்கப்படுவதற்கு முன்பு தொழிலைக் கற்றுக் கொண்டார், அவர் அங்கு இப்போது ஒருவருடத்திற்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் அறிவு மீதான ஆர்வம்

Finlays’ Alnwick Estateஇல் உதவி கண்காணியாக தொழில்புரியும் நவோதா விஜயாங்கனியும் தன்னை பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதை ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை மற்றும் பல்கலைக்கழக மாணவராகப் பயிற்சி பெறும் காலப்பகுதியில் மலை நாட்டிலுள்ள அழகையும், மலைகளையும் ரொம்பவே நேசித்து தற்செயலாகவே இந்த தொழில்துறையில் நுழைந்துள்ளார்.

ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழத்தில் மாணவராக இருந்த காலத்தில், பேராதனை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தொடர்பில் முதுகலை படிப்பை முடிப்பதற்கு முன்னர் தேயிலை தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றைப் பற்றியும் கற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அவர் தேயிலை ஆராய்ச்சித் துறையில் இணைந்து கொண்டார், அங்கு தனது பயிற்சியை முடித்தபோது, அவர் தனது முகாமையாளருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் தன்னைப் போன்ற தகுதியுள்ள ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்பு குறித்தும் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எனக்கு தேயிலை மீது ஏன் அவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது என்று பார்க்கும் போது, நான் மலையக சூழலையும் அதன் காலநிலையையும் அதிகமாக நேசிப்பதனால்.

தேயிலை வர்த்தகத்திற்கு பின்னால் உள்ள விஞ்ஞானம் கவர்ச்சிகரமானதாக இருப்பதை நான் எப்போதும் கண்டேன்.

Finlays தோட்டத்திற்கு ஆட்களை வேலைக்காக தேடுவதை பற்றி நான் அறிந்து கொண்டேன், அப்போது அங்கு என்ன பதவி என்று கூட எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இந்தத் துறையில் பணிபுரிவதற்கு எனக்கும் விருப்பம் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இது பாரம்பரியமாக பெண்கள் நுழையாத ஒரு துறையாகும் என்பதையும் நான் அறிவேன், இதுவொரு சவாலானது என கூறியவர்களுக்கு முன்னால் நானும் சாதிக்க வேண்டுமென உணர்ந்தேன்.” என தெரிவித்தார்.

இன்று Alnwick Estateஇற்கு அனுப்பப்பட்ட பெண் உதவி கண்காணியாளர் ஆவார், அங்கு அவர் 130 நபர்களைக் கொண்ட குழுவை நிர்வகிக்கிறார்.

இந்த பொறுப்பானது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கின்ற போதிலும் அதனைக் கடந்து வந்துள்ள நிலையில் நவோதா தனது கோட்பாடுகளைப் போலவே தனது வேலையில் சிக்கல்கள்கள் இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக பணிபுரிந்து வருகின்றார்.

 

Related Articles

Latest Articles