இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரும் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள குறித்த வீரர்கள் மூவரும், சுகாதார நடைமுறையான உயிர்குமிழி நடைமுறையை மீறி செயற்பட்டனர்.
இதனால் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே மூவரையும் இடைநிறுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.










