இலங்கை அணி அசத்தல் – இரட்டை சதமடிப்பாரா திமுத்?

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைவதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகின்றது.

நான்காம் நாள் ஆட்டம் இன்றாகும். முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, தற்போதுவரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 437 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இன்று சதமடித்தனர். திமுத் கருணாரத்த ஆட்டமிழக்காது 181 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவர் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடனும் ஒப்பிடுகையில், இலங்கை கிரிக்கெட் அணி 104 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

பல்லேகல மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 541 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

Related Articles

Latest Articles