சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அத்தொடருக்கான இலங்கை அணியின் ரி – 20 (போட்டி) தலைவராக சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஒருநாள் கிரிக்கெட் அணி தலைவராக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் மற்றும் ரி – 20 அணிகளுக்கான உப தலைவராக சரித அசலங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடவுள்ள உத்தேச அணி விவரத்தையும் இலங்கை கிரிகெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட தசுன் சானகவும் உத்தேச அணியில் இடம்பிடித்துள்ளார்.
அணிவிபரம் வருமாறு,

