இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 209 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 493 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி 251 ஓட்டங்களையும் பெற்றன.
வலுவான நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.
437 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 227 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்ஸின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ப்ரவீன் ஜயவிக்ரம இரண்டாம் இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.