இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆளுமைகள் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை ஆளுமைகள் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் (Road Safety World Series) என்ற முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பங்குபற்றும் உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஆளுமைகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து ஆளுமைகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றது. டில்சான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 79 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆளுமைகள் அணி, 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை ஆளுமைகள் அணித் தலைவர் டில்சான் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரே ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். இவ்வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.