வவுனியாவில் இன்று காலை இளம் தாயொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார் எனக் கூறப்படும் இளைஞரும் தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டை பகுதியில் வசித்து வந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் விவகாரம் இக்கொலைக்கு காரமாண இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
