இளைஞர், யுவதிகளுக்கு ஊசி மூலம் போதை வஸ்து ஏற்றி லட்சக்கணக்கில் பணம் உழைத்ததாக கூறப்படும் தாயும், மகளும் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரு பெண்களினதும் கைத்தொலைபேசிகளை சோதனையிட்டபோது அதில் காணப்பட்ட தகவல்களின்படி சில நாட்களில் 5 முதல் 7 லட்ச ரூபா வரை கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
48 வயதான தாயும் 31 வயதான மகளும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஒருமுறை ஊசி மூலம் போதை வஸ்து ஏற்றிக் கொள்வதற்கு 3000 ரூபா முதல் 4000 ரூபா வரை அறிவிட்டுள்ளனர் .
