இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10, 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடத்தினை காட்டிலும் இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளதென அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்தில் முதல் 9 வாரக்காலப்பகுதியில் 4,911 டெங்கு நோயாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இந்த வருடத்தில் குறித்த காலப்பகுதியில் 10, 688 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், 11 மாவட்டங்களில் 38 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதென சமூக சுகாதார நிபுணர் விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
